Thursday, May 12, 2016



                                                      உ                            உ                                               

                    ஸ்ரீ விசாலாக்ஷி ஸமேத ஸ்ரீ விஸ்வநாதர் ஸஹாயம்

                    ஸ்ரீ மீனாக்ஷி ஸமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் துணை

                கேரள மாநிலம், பாலக்காடு தாலுக்கா, கொல்லங்கோடு, புதுகிராமம்

                       ஸ்ரீ விசாலாக்ஷி ஸமேத ஸ்ரீ விஸ்வநாதர் ஆலயம்

                       ஸ்ரீ லலிதாம்பிகா கோடி அர்ச்சனை மஹா வைபவம்

நாள்: ஸ்வஸ்திஸ்ரீ துர்முகி வருஷம், ஆடி மாதம் 1ம் தேதி–10ம் தேதி, 16.07.2016–25.07.2016

நேரம் : காலை 08.30 – 11.30 & மாலை 05.00 – 8.00




பக்த ஸ்ரேஷ்டர்களுக்கு,

பாரத புண்ய பூமியில் மஹரிஷிகள், மஹா சித்த புருஷர்கள் செய்த தவத்தின் பயனாக, தெய்வத் திருவருள் பொங்கிடும் வகையில் ஆலயங்கள் அமைத்து பக்தர்கள் யாவருக்கும் பலன் கிடைத்திட வழிவகை செய்தார்கள். தேவதா ஸான்னித்யம் பெருகிட சிறப்பான வழிபாட்டு முறையையும் வகுத்தார்கள்.

அவ்வகையில், கொல்லங்கோடு கிராமம், புதுகிராமம் ஸ்ரீ விசாலாக்ஷி ஸமேத ஸ்ரீ விஸ்வநாதர் ஸ்வாமி -5 நூற்றாண்டுகளுக்கு முன்னர் கோயில் கொண்டு அமைந்து, கேரள ஆலயக் கலை அமைப்பில் அழகுற அமைந்து, சிவாகம முறைப்படி வழிபாடுகள் நடைபெற்று வரும் அற்புத ஆலயம். கேரள மரபும், ஆகம மரபும் ஒரு சேர அமைந்திட்ட அதிசய ஆலயம். கங்கைக்கு நிகரான காயத்ரி ஆற்றங்கரையில் அமைந்த, காசிக்கு நிகரான புண்ணியங்களை நல்கும் அழகிய ஆலயம். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை விரைவில் அளித்து, பக்தர்களின் இடர் நீக்கி, விபத்துக்களை விலக்கி, நோய்களை நீக்கி நீடித்த ஆயுள் அதிகரிக்க நல்கிடும் ஸ்ரீ விஸ்வநாதர் – மிருத்யுஞ்சய லிங்கமாக அமைந்திட்ட நல்லதொரு ஆலயம். நல்ல இல்லற வாழ்வு, திருமண யோகங்கள், வம்ச அபிவிருந்தி அருளும் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் விளங்கிடும் வியத்தகு ஆலயம். வருடந்தோறும் நியமங்களின்படி திருவிழாக்கள் சிறப்புற நடந்திடும் சீர்மிகு ஆலயம்.    

இவ்வாலயத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாந்த்ரீக ப்ரச்னம் பார்க்கையில், கோயிலும், கோயிலைச் சார்ந்த இடங்களும், ஆலயத்தைச் சேர்ந்த பக்தர்களும் மென்மேலும் வளங்களும் நலங்களும் பெருக,  இயற்கை இடர்கள் நீங்கி உலக நன்மை பெருக, விவசாயம் செழித்து, மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்திட ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத்தினைக் கொண்டு, அம்பிகைக்கு கோடி அர்ச்சனை செய்தல் நலம் என்ற தெய்வத் திருவாக்கு கிடைத்திட்டது.

அதனை மெய்ப்பிக்கும் வகையில் தெய்வத் திருவருளால் மேற்கண்ட தேதியில் நடத்திட உத்தரவும் கிடைத்தது.

நூறு தில்லை வாழ் அந்தணர்கள் எனும் தீக்ஷித பெருமக்களால், லலிதா ஸஹஸ்ரநாமம் எனும் அம்பிகையின் ஆயிரம் பெயர்களைச் சொல்லி மங்கலப் பொருட்கள் கொண்டு அர்ச்சிப்பது (100x1000=1,00,000) ஒரு லக்ஷார்ச்சனை ஆகும். காலை ஐந்து முறை  செய்வது ஐந்து லக்ஷ அர்ச்சனைக்கு  ஈடாகும். மாலை ஐந்து முறை செய்வது ஐந்து லக்ஷார்ச்சனைக்கு சமமாகும். ஆக ஒரு நாளில் பத்து லக்ஷம் (10X1,00,000=10,00,000) முறை அர்ச்சனை செய்வது உத்தமம். பத்து தினங்களில், நாளொன்றுக்கு பத்து லக்ஷம் அர்ச்சனைகள் செய்வது (10X10,00,000=1,00,00,000) ஒரு கோடி அர்ச்சனை செய்திடுதலாகிவிடும். அம்பிகைக்கு ஒரு கோடி அர்ச்ச்னை செய்வது ஒரு மாபெரும் வைபவம். ஒரு அர்ச்சனை செய்தாலே பெரும் பலன்களை தந்திடும் அம்பிகை, ஒரு கோடி அர்ச்சனை செய்வதைக் காண்பது தேவியின் பரிபூரணமான அருளை பன்மடங்கு தந்திடும்  என்பது நிதர்சனமான உண்மை.

லலிதா ஸஹஸ்ரநாமம் : அம்பிகையே அகில உலகிற்கும் காரணியாக விளங்குபவள் என்பதை பறைசாற்றும் சாக்த வழிபாட்டு முறை, தேவியின் பூரண அருள் பெற பல்வேறு வழிவகைகளை வகுத்துள்ளது. அதில் மிக எளிதானதும், அதீத சக்தி வாய்ந்ததும் ஆனது தேவதா பாதாரவிந்தங்களில் மங்கலப் பொருட்கள் கொண்டு, சக்தியின் ஸகல லீலைகளையும் போற்றும் வகையில் அமைந்த பெயர்களைக் கொண்டு செய்யப்படும் அர்ச்சனை எனும் வழிமுறை ஆகும்.

சாக்த சாஸ்திரங்கள் - மிக உயர்ந்த வழிபாட்டு முறையாக - லலிதா ஸஹஸ்ரநாமத்தினை அறுதியிட்டுக் கூறுகின்றன.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - வேதங்களுக்கு நிகரானதும், அம்பிகையின் வாக்கு தேவதைகளால் அருளப்பட்டதும், ஸ்ரீ ஹயக்ரீவ பெருமான் - லோபாமுத்ரை ஸஹித அகஸ்தியருக்கு உபதேசித்து உலகோருக்கு அருளியதும், இலக்கணக் குறைகள் இல்லாததும், எளிய வார்த்தைகள் கொண்டதும், அழகிய சந்தங்களுக்கு சொந்தமானதும், கேட்பதற்கு மிக ரம்மியமானதும், பக்திமான்கள் எந்த நிலையில் இருந்தாலும் சொல்லத் தக்கதும், அம்பிகையின் அனைத்து அம்சங்களையும் பகர்வதும், யந்திரம், மந்திரம், தந்திரம் என மூவகை வழிபாடுகளையும் செய்ததின் முழு பலன் கிடைக்கச் செய்வதும்,  ஒவ்வொரு எழுத்தும் பீஜாக்ஷரமாக அமைந்து, ஒரு முறை முழுவதும் சொன்னாலே கோடி ஜப பலன் கிடைத்திடுவதும், வேண்டும் வரங்களை உடன் வழங்கிடுவதில் நிகரற்றதும், எதிர்ப்புகளை அறவே நீக்கிடுவதும், பாபங்களை அழித்து புண்ணியங்களைப் பெருகச் செய்வதும் என அனைத்தையும் தன்னகத்தே கொண்டது.

தில்லை வாழ் அந்தணர்கள் எனும் தீக்ஷிதர்கள் : இம்மஹா வைபவத்தை நடத்தி தரும் பெரும் பொறுப்பை -  சைவர்களுக்கு கோயில் என்றாலே பொருள் படும் தமிழகத்தில் உள்ள சிதம்பரம் எனும் ஸ்தலத்தில், ஸ்ரீ சிவகாம சுந்தரி ஸமேத ஸ்ரீமன் ஆனந்த நடராஜ ராஜ மூர்த்திக்கு, அனுதினமும், ஆறுகாலங்களிலும் பூரண வைதீக நெறிமுறைப்படி, அர்ப்பணிப்பு உணர்வோடு, பூஜைகள் செய்வதற்காகவே பூமிக்கு ஈசனால் அழைத்து வரப்பட்டவர்களான - தீக்ஷிதர்கள் ஏற்றுள்ளார்கள். அவர்கள் ஏப்ரல் 2016ல் நடராஜ மூர்த்திக்கு கோடி அர்ச்சனை செய்து பெரும் சாதனை புரிந்தவர்கள். அரனுக்கு கோடி அர்ச்சனை செய்த திருக்கரங்களால், நமது ஆலய அம்பிகைக்கு கோடி அர்ச்சனை செய்ய இசைந்துள்ளார்கள்.

அற்புதமான ஆலயத்தில், அம்பிகையின் ஆயிரம் பெயர்கள் கொண்டு, அந்தணர்களின் திருக்கரங்ளால் கோடி அர்ச்சனை மஹா வைபவத்தைக் காண்பது அரிதிலும் அரிதான மகத்தான நிகழ்வு.

நற்குழந்தைப் பேறு, பாலாரிஷ்ட தோஷ நிவர்த்தி (குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் நீங்குதல்), குழந்தைகளின் கல்வி மேம்பாடு, நல்ல ஞாபக சக்தி, தேர்வுகளின் நன்மதிப்பெண்கள் பெறுவது,  கற்ற கல்விக்கேற்ற உத்யோகம், உத்யோக உயர்வு,  வியாபாரத்தில் பெருலாபம்,  சுப திருமண யோகம்,  நல்ல இல்லற வாழ்க்கை, நோயற்ற நீடித்த நல்வாழ்வு, வம்ச அபிவிருத்தி, ஸகல ஸெளபாக்கியங்கள், பித்ரு தோஷ நிவர்த்தி, முன்னோர்கள் பூரண ஆசீர்வாதம், நவக்ரஹ ஜாதக தோஷ நிவர்த்தி மற்றும் வேண்டும் வரங்களை மிக விரைவில் வழங்கிடும் இந்த மஹா மஹா வைபவத்தில் பக்தர்கள் அனைவரும் பங்கு கொண்டு, ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ விசாலாக்ஷி அம்பிகையின் பரிபூரண அருளால் அனைத்து பயன்களையும் பெற வேண்டுகின்றோம்.



கோடி அர்ச்சனை ஸர்வஸாதகம் : நி.த. நடராஜ தீக்ஷிதர் & உ. வெங்கடேச தீக்ஷிதர்

ஆலய அர்ச்சகர் மற்றும் ஸ்தானிகர் :Sri Viswanathaswamy pujakar,Sivagama praveen Vamadevasivam V.Ravi gurukkal



இங்ஙனம்

ஸ்ரீ ராமசந்திரன்

ஆலய நிர்வாகிகள்

கிராம பொதுமக்கள்



இந்த மாபெரும் வைபவத்திற்கு நிதியுதவி, பொருளுதவி செய்து, நன்கொடைக்கான முறையான ரசீதும், விசேஷ பிரஸாதங்களும்  பெற விரும்பும் பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: C.Ramachandran, II/83. Double St, Pudugramam, Kollengode-678506. Kerala State
 தொலைபேசி: 04923 262362, 0422 2972926
 அலைபேசி எண்கள்: +91 9446290638
மெயில் ஐடி:
வெப் ஐடி.

வங்கி கணக்கு எண்கள் :

Bank account details:
State Bank of Travancore, Kollengode Branch, Gayatri complex, Kollengode-678506.
Account no: SB 57042868283
IFSC Code:SBTR0000184
MICR Code:678009102











Thursday, December 11, 2014

I discussed with Sivacharya on 10th Dec, 2014.  He has given some suggestions.
Now I have to talk to the priest and ugranam.
Dec 11, 2014

Saturday, November 29, 2014

100 lakharchana of Lalitha Sahasranamam equal to Koti archana.


I shall give a brief description of a Trust, Mahadeva Pattar Trust. This private trust 
was formed after the demise of my father Sri. P. M. Chidambara Iyer with the main 
object of conducting all religious festivals in Sri Viswanatha Swamy temple that 
our family was doing from the time of our grandfather, Sri Mahadeva Pattar.

Now, I wish that this Trust undertake more responsibility. I had published in this blog
 about KOTI ARCHANA to Vishalakshi Ambal.This is broken into 100 laksharchnai 
and at a time one laksharchnai is conducted with 10 rithvics and each one of them chanting
 Lalitha Sahasranamam 10 times on one day thus completing 1 lakh namavalis. 
Laksharchanai will be on Sundays only. After the daily puja in the morning, 
archana to Sri.Vishalakshy Amman will commence and will be over by 4.30 pm. before the sayamsandhya puja starts,with a break for food in between. While chanting the mantram, 
Sivacharyar will be doing archana with flowers ans kunkumam to the deity.

Details will be worked out after consultation with the Trustees of Devaswam, Sivacharyar,ritwics 
and others connected with this project.

I have given a brief description in Google+

Saturday, January 14, 2012

Mahakumbabishekam

Sthala mahatmyam.
================


Pudugramam is a village in Kollengode in Palakkad Dt, Kerala State. The earliest residents were migrants from Kadambakudi, Ganapathy Agraharam,Mannargudi and Mayiladudurai villages in Thanjavur Dist,Tamilnadu.They migrated from Thanjavur at the time of Tippu Sultan due to religious unrest prevailing in Thanjavur

The earliest settlers in Pudugramam were Narayana Pattar and Raghunatha Pattar from
Kadambakudi.They were very religious Brahmins and they were honoured by Samoodiri Raja
with lands to cultivate paddy..

At the time of migration they had carried with them the idols of Sri.Sundareswara Swamy, Sri.Meenakshi Ambal,Nandikeswarar,Ganapathy and Chandikeswarar whom they were worshipping in Kadambakudi.Because of the troubled times,they preserved the idols under the soil, in the eastern bank of river Gayatri under a banyian tree. A small Kali temple was also there. During the recent Deva prasnam it was found that the Goddess Kali had protected these deities and we have to have a puja for satisfaction of that deity .

One of the residents from the Narayana Pattar family, who had accepted Sanyasaasramam,
went to Kasi.On his return, he brought three Sivalaingam from Kasi one each one was
installed in Kalpathy, Palakkad, Koduvayur and Pudugramam.Siva Lingam in Pudugramam was installed facing west , so Sri Viswanathaswamy is known as Mrithyujaya lingam.It has proved by facts that Sri Viswanathaswamy has saved the lives of devotees who were in distress and danger to life.

A Mahakshetram was constructed by that Sanyasi whose Brindavanam is located within
temple campus with Sri Viswanatha swamy and Sri Vishalakshy Ambal as main deities and
Ganapathy,Kalyanasubramanian,Bhairavar,Chandikeswarar,Suryan and Dakshinamurthy as
parivara Devas.Those deities which were hidden on east bank of river Gayatri were also
installed near Suryan which had been installed earlier, as a separate complex.
Thus we have two sannidhis for Siva and Parvathy.

Deva prasnam says that Sri Viswanathaswamy and Sri Sundareswarar are of equal importance and all pujas should be done equally.

A small idol of Anjaneya was found about 70 years ago in the temple campus.It was installed as a deity and puja is done everyday.An Anjaneya Utsavam is held for a week in the month of May every year.

There are number of instances where Lord Viswanatha has saved lives of individuals, as
Mrithyujaya. Prayer to Sri.Visalakshy with Swayamvara Parvathi mantram has brought
marriage to girls.

Temple is under the control of Malabar Devaswam Board(MDB). Day-to-day administration
is done by trustees nominated by MDB after proper inquiry.Puja is done by Sivacharya.
The present Sivacharya is the fourth generation of earliest Sivacharya.We do not know much about the earliest Sivacharya, who was known as Patta Kurukkal. His son Sri Rama Kurukkal,according to Deva prasnam was a Mahan, an ardent messenger of Siva. His steadfast devotion was incomparable.His son Sri Viswanath Kurukkal was a devoted priest. Now his sons Ravi,Sankaran,Manju and Guhan are now continuing the puja in the same manner.

Temple had vast landholdings and its revenue was sustaining the expenses of the temple.After the land legislation in Kerala, temple lost all its revenue.Now it is at the mercy of MDB.Temple staff including Sivacharya is not getting salary worth the name.It is now met partly by devotees which is not adequate under the present day cost of living.

Kumbabishekam of the temple is proposed to be celebrated on May 3, 2012 under the present Sivacharyas Sri.Ravi Kurukkal and Sankara Kurukkal along with his brothers. Temple is expecting contributions/donation from all devotees and those residents now settled down in different parts of the world.A website has been opened as

A committee has been elected to conduct the kumbabishekam.A current account has been
opened in The Punjab Nation Bank,Kollengode-678506. Remittances can be made to the
current a/c no.429600 2100004004, IFSC Code No. PUNB 0429600 or sent to The Treasurer,
Grama Jana Samooham, Pudugramam,Kollengode-678506.
(Ph nos.04923 315828,08590082021, 09947949874.)

Sri.Meenakshi, Sundareswaraswamy, Vishalakshi and Viswanathaswamy have blessed
the devotees in the village and some eminent persons have hailed from this village like
Sri.R.V.Subramaniam,a top administrator, Dr.P.K.Kalyanaraman a consulting doctor,
Sri.P.S.Ramachandran, a leading advocate and now a consultant for an international companyand a Judge in the High Court of Kerala.

Friday, April 22, 2011

Wednesday, January 12, 2011

A Great Soul

Sri.Viswanathan (Vicha)joined the feet of Sri.Viswanatha Swamy on Jan 12, 2011,
He lived his entire life in the service of Lord. I deeply condole his demise.

Saturday, December 25, 2010

Astamangala prasnam.

Astamangala prasnam will be held by 3 eminent astrologers on Jan 26 & 27, 2011 in the temple Navaratri Mandapam.

Ramachandran